கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பேர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பேருக்கு எதிரான வழக்கை விசாரிக்க நீதிபதி மகேஷ் வீரமன் தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மேல் நீதிமன்ற விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
போலியான மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட குற்றச்சாட்டே, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவின் வேண்டுகோளின் பேரில் தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ இந்த அமர்வை நியமித்தார்.
கூறப்படும் மோசடிக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும், முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மற்றும் புற்றுநோய் தடுப்பு மருந்தான ரிட்டுக்ஸிமாப் ஆகியவற்றை இறக்குமதி செய்ய சதி செய்வதன் மூலம், அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படுத்தியது உட்பட மொத்தம் 14 குற்றச்சாட்டுகள், 12 பேருக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.