ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய பிரச்சினைகளைத் தீர்க்க அரசு உடனடியாக தலையிடும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய முரண்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஓய்வூதிய சீர்திருத்தம் 2015 முதல் ஓய்வூதியம் பறிக்கப்பட்டமை மற்றும் 1997 ஆம் ஆண்டு பி.சி.பெரேரா ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விரிவாக இந்த கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டன என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த பிரச்சினைகள் தொடர்பாக மேலும் ஒரு சந்திப்பை இன்று (30) நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது
மேலும், இந்த சந்திப்பில் அரச நிர்வாக அமைச்சு நிதி அமைச்சு மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர் என்றும் தெரியவருகிறது