சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கும் விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கம்

வடமாகாண விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கம் (NPAI UNION) இன்று (30) ஒருநாள் அடையாள சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
வடமாகாண விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கத்தினால் கோரப்பட்ட தொழில்முறைமைக் கோரிக்கைகளிற்காகான நிரந்தர தீர்வுகள் வழங்கப்படாமையினாலும் காலநீடிப்புச் செய்வதனாலும், வட மாகாண விவசாய அமைச்சு மற்றும் திணைக்களத்தின் ஏதேச்சதிகாரமான நிர்வாக மற்றும் நிதி நடைமுறைகளுக்கு தீர்வு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஏனைய மாகாணங்களினை விட, வட மாகாண விவசாய போதனாசிரியர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால நிர்வாக மற்றும் நிதி தொடர்பான தொழில்முறைமைக் கோரிக்கைகளினை நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்படகின்றது.
இந்த நிலையில் வடமாகாண விவசாய திணைக்களம் மற்றும் திணைக்களத்தின் நிலையற்ற நிர்வாக மற்றும் நிதிக்கொள்கையினை கண்டித்து ஒருநாள் சுகயீன விடுமுறைப் போராட்டம் நடாத்தப்படுகின்றதாக சுட்டிக்காட்டியு்ளளனர்.
அத்துடன் இன்றைய தினம் விவசாயிகளிற்கு ஏற்படும் சேவைத்தடைகளிற்கு வட மாகாண விவசாய பணிப்பாளரே பொறுப்பாளியாவார் எனவும் தெரிவித்துள்ளனர்.