News

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (07) பிற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை மே மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று (07) காலை அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டார்.

அதற்கமைய, அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது , அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

அத்துடன், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button