News
யாழ். காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை முன்னேற்றம்!

விமான கட்டணத்தை விட கப்பல் கட்டணம் குறைவாக இருப்பதால் கப்பலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கப்பலில் ஏற்கனவே பயணிகள் 10 கிலோ வரை பயணப்பொதியை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது 22 கிலோ வரை மேலதிகமாக பயணப்பொதியை எடுத்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளன.
இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என சுபம் கப்பல் நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.