News
சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி

உயர்தர தொழிற்கல்விப் பிரிவின் கீழ் தரம் 12 இல் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த அறிவிப்பானது, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு முதல் 608 பாடசாலைகளில் தொழிற்கல்விப் பிரிவு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறியிருந்தாலும் இந்தப் பிரிவுக்கு மாணவர்களைச் சேர்க்கும்போது அது இங்கு கருத்தில கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சேர்க்கை கோரப்படும் பாடாசலையின் அதிபரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.