பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு.!

வழமையான நேர அட்டவனையின் பிரகாரம் இன்று(18) ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு நேற்று(17) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
தற்போது ரயில் நிலைய அதிபர்களும் ரயில் கட்டுப்பாட்டாளர்களும் கடமைக்கு சமுகமளித்தனர் என ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
தமக்கான தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் நாளை(19) மீண்டும் கலந்துரையாடலில் ஈடுபட்டு அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி ரயில் நிலைய அதிபர்களினால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் சுமார் 90 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.