சஜித் தரப்புக்கு காத்திருக்கும் பேரிடி: ஆளும் கட்சியின் அறிவிப்பு

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சில அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகளை நாடாளுமன்றத்தில் வெளியிடத் தயாராக இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல்வாதிகள் பத்து பெரிய பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்று சமீபத்தில் வெளிப்படுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (21) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ஆனந்த விஜேபால இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் முடிந்த பிறகு தொடர்புடைய தகவல்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.