News

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ (Litro Gas) சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் காணப்பட்ட விலையிலேயே லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்ப​னை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் (Laugfs Gas) விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என நேற்று (01.06.2025) தெரிவிக்கப்பட்டது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிருவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி ஜூன் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button