News

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

வெளிநாட்டு சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் முதலீட்டு விளம்பரங்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் வாழும் மக்கள் வெளிநாட்டு அசையாச் சொத்தில் முதலீடுகளை (வெளிநாட்டு ஆதன முதலீடுகள்) ஊக்குவிக்கின்ற விளம்பரங்கள் அண்மைக்காலமாக அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுவதை இலங்கை மத்திய வங்கி அவதானத்தில் கொண்டுள்ளது.

அத்தகைய முதலீடுகளுக்கான வெளிநாட்டு நிதியிடலை பெறுவதற்கான வழிகாட்டலையும் இவ்விளம்பரங்கள் வழங்குகின்றன.

2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குவிதிகளினதும் கட்டளைகளினதும் பிரகாரம், வெளிநாட்டு சொத்துக்களை கொள்வனவு செய்யும் போது சில விடயங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

அத்துடன், அதிகாரமளிக்கப்படாத வெளிநாட்டுச் செலாவணி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வெளிநாட்டுச் செலாவணி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button