டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்

அடுத்த வருட (2026) நடுப்பகுதியில் புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன (Eranga Weeraratne) தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிப்பதற்காக இந்திய நிறுவனங்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் அமைச்சு (Ministry of Digital Economy) தெரிவித்தது.
இதற்காக 4 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த திட்டத்திற்காக 10.4 பில்லியன் ரூபா நிதி இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் அடையாளத்தை நவீனமயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் பொது சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் டிஜிட்டல் உருமாற்ற பயணத்தில் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.