News
இலங்கை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள முக்கிய வீரர்கள்.

இலங்கை – பங்களாதேஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டி20 போட்டிகளுக்காக இலங்கை அணியில் தசுன் ஷானக்க மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோர் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இவ்விருவரும் தேசிய அணிக்குத் திரும்பியுள்ளனர்.
2026 ICC ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்தை மையமாகக் கொண்டு தேர்வுக் குழு புதிய அணியை உருவாக்க எடுத்திருக்கும் முயற்சியின் பலனாக சகலதுறை ஆட்ட காரர்களான இருவரும் இணைந்து கொண்டுள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
ஷானக்க மற்றும் கருணாரத்னவின் வருகை அணியில் புதிய உத்வேகம் எதிர்பார்க்கப்படுகிறது.