உலகளாவிய ரீதியில் முன்னிலையில் பெற்றுள்ள இலங்கை!

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலகின் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸின் சமீபத்திய முன்பதிவு தரவுகளுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கை அதன் வளமான கலாசார பாரம்பரியம், அழகிய கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மலிவு விலையில் ஆடம்பர அனுபவங்களை சுற்றுலா பயணிகள் கொண்டுள்ளனர்.
அவ்வாறான பயனர்களின் தேடல் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவத்துள்ளது.
ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களுக்கு இடையிலான கோடை காலம் தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் விமான தேடல்கள் கடந்த ஆண்டை விட 7சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜுலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் பயணிகள் எதிர்நோக்கும் மிகவும் கலாசார அனுபவங்களைக் கொண்ட நாடுகளை எமிரேட்ஸின் சமீபத்திய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இதில் உலகளாவிய ரீதியில் மூன்று இடங்களில் இலங்கை ஒன்று என்பது சிறம்பம்சமாகும்.