News
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு குறித்து வெளியான தகவல்

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விலைகள் மேலும் குறைய வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, எதிர்காலத்தில் விலை குறைப்பினை மக்கள் அனுபவிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.