நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு – மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

2025 பெப்ரவரி 9 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பமாக உள்ளது.
இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைக்க விரும்புவோர் 0772943193 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையகத்தின் (PUSL) தொடர்பு பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பில், மின்சார வாரியத்தால் நடத்தப்பட்ட சிறப்பு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சாட்சியங்கள் கோரப்படும்.
இலங்கை மின்சார வாரியம் மேற்கொண்டுள்ள விசேட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று ஆணையத்தின் தொடர்பு பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தங்களது கருத்துகளை வெளிப்படுத்த விரும்பும் நபர்கள், 0772943193 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.