வங்கி அட்டை பாவனையாளர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு

வங்கி அட்டைகளை (ATM Cards) பயன்படுத்தி செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து 2.5% போன்ற கூடுதல் கட்டணத்தை வசூலிக்க வணிகர்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
அட்டை கட்டண இயந்திரத்தைப் பெறும்போது வணிகர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், வாடிக்கையாளருக்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படக்கூடாது என்று மத்திய வங்கி தெளிவாகக் கூறியுள்ளது.
இதன்படி, ஒரு வணிகர் பட்டியலிடப்பட்ட விலையை விட அதிகமாகக் கேட்டால், வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் அட்டை வழங்கும் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும் என அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில கடைகள் மற்றும் சேவை வழங்குநர்கள் அட்டை கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணங்களைச் சேர்ப்பதாக நுகர்வோரிடமிருந்து அதிகரித்து வரும் முறைப்பாடுகளுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.