இலங்கைக்கு இலவச விசா: வெளியானது 40 நாடுகளின் முழுப்பட்டியல்!

இலங்கையில் விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நாடுகளில் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது.
நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க அரசாங்கம் 40 நாடுகளிலிருந்து வருவோருக்கு வீசா கட்டணம் வசூலிக்காமல் இருக்க தீர்மானித்திருந்நது.
முன்னதாக சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளுக்கு வீசா கட்டணம் தள்ளுபடி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது மேலும் 33 நாடுகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், இந்த 40 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோரிடம் வீசா கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இதனால் அரசாங்கத்திற்கு அமெரிக்க டொலர் 66 மில்லியன் வருமான இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இதன்படி, விசா கட்டணம் வசூலிக்கப்படாத 40 நாடுகளின் பட்டியல் பின்வருமாறு…
பிரித்தானியா
ஜெர்மனி
நெதர்லாந்து
பெல்ஜியம்
ஸ்பெயின்
அவுஸ்திரேலியா
போலந்து
கசகஸ்தான்
சவூதி அரேபியா
ஐக்கய அரசு ராஜ்யம்
நேபாளம்
சீனா *
இந்தியா *
இந்தோனேசியா *
ரஷ்யா *
தாய்லாந்து *
மலேசியா *
ஜப்பான் *
பிரான்ஸ்
அமெரிக்கா
கனடா
செக் குடியரசு
இத்தாலி
சுவிட்சர்லாந்து
ஆஸ்திரியா
இஸ்ரேல்
பெலருஸ்
ஈரான்
ஸ்வீடன்
பின்லாந்து
டென்மார்க்
தென் கொரியா
கட்டார்
ஓமான்
பஹ்ரைன்
நியூசிலாந்து
குவைத்
நோர்வே
துருக்கி
பாகிஸ்தான்