நாடாளுமன்றத்தில் AI தொழில்நுட்பம்!

நாடாளுமன்ற செயற்பாடுபகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஒரு முன்னோடித் திட்டம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் செற்படுத்தப்பட்டது.
பொது நிதிக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடாளுமன்ற ஹன்சாட் அறிக்கைகள், குழு கூட்ட அறிக்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைத் தயாரிப்பதற்கான அமைப்பை நவீனமயமாக்க தேவையான பாதுகாப்பான AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹர்ஷனா ராஜகருணா, சம்பிகா ஹெட்டியாராச்சி, நிமல் பாலிசேன, விஜேசிறி பஸ்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா அரியரத்ன மற்றும் பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
AI இன் பயன்பாடு குறித்த இந்த முன்னோடித் திட்டம் அரசாங்க நிதிக் குழுவின் ஒப்புதலுடன் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களும் இந்த தொழில்நுட்பத்தை நன்மைக்காகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.