நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

பதில் பொலிஸ் மா அதிபரின் பெயரை குறிப்பிட்டு போலியான PDF கோப்பு தற்போது பரப்பப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக இந்த போலி கோப்பு அனுப்பப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த போலி மின்னஞ்சல்கள் judicial.gov-srilanka@execs.com polcermp@gmail.com andrep.atricia885@gmail.com ecowastaxs@gmail.com ccybermp@gmail.com vinicarvalh08@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
எனினும், அத்தகைய மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அனுப்பப்படும் செய்திகள் இலங்கை பொலிஸ் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் அனுப்பும் செய்திகள் அல்ல.
அவை தொடர்பாக தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக்கொள்ள வேண்டாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் செப்டெம்பர் 8 ஆரம்பம்
2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 8 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளன.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) கூட்டம் வியாழக்கிழமை (24) டாக்காவில் நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) ஆரம்பத்தில் கூட்டத்தில் பங்கு பற்ற எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பின்னர் இணையத்தில் இணைந்து கொள்ள ஒப்புக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இருப்பினும், முன்னைய அறிக்கைகளின்படி, போட்டி செப்டம்பர் 10 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, 2025 ஆசிய கிண்ணப் போட்டிகள் செப்டம்பர் 8 முதல் 28 வரை நடைபெறும் என்று ஊடக அறிக்கை கூறுகிறது.
இந்தப் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன, இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை அதன் முழுமையான உறுப்பினர்களாகவும், ACC பிரீமியர் கிண்ணத்தை வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹொங்கொங் மற்றும் ஓமான் ஆகியவை ஏனைய மூன்று அணிகளாகவும் இணைய திட்டமிடப்பட்டுள்ளன.