பிளாஸ்டிக் கழிவுகளின் அதிகரிப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 2040ஆம் ஆண்டுக்குள் 1.3 பில்லியன் தொன்களை விஞ்சும் என புதிய ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளுக்குள் நிலமும் நீரும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழியும் என்று அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடல் நீரில் கலக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் அழிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கக் கூடும் என்றும் ஆய்வு கூறுகிறது.
கொரோனா காலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் சுகாதார உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பது இந்தப் பிரச்சினையை தீவிரப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உணவு பேக்கேஜிங் ஒரு கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது என்பதையும் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.