நிறுத்தப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் சமீபத்தில் நீதி அமைச்சுக்கும் சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது என்பது தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியாகும்.
தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்துக்காக மக்கள் பணம் பெரும் பகுதி வீண் விரயமாக்கப்படுவதாகவும் ஐந்து வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்தால் ஆயுட்காலம் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
அரச சேவையில் உள்ளவர்களுக்கு 60 வயதின் பின்னரே ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சேவையையே செய்கின்றனர் அவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்புரிமை வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பில் சமூகத்தில் பேசு பொருளாக்கியவர்கள் தேசிய மக்கள் சக்தியினர் என்பது குறிப்பிடத்தக்கது.