News

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்! ஜப்பானைத் தாக்கியது சுனாமி – பல நாடுகளுக்கு எச்சரிக்கை

வடகிழக்கு ஜப்பானில் உள்ள குஜி துறைமுகத்தில் சுனாமி அலைகள் 1.3 மீட்டர் உயரத்தை எட்டியதாக NHK வேர்ல்ட்  இணையத்தளம் தெரிவித்துள்ளது.

நெமுரோ ஹனசாகியில் 80 செ.மீ. மற்றும் இஷினோமாகி துறைமுகத்தில் 70 செ.மீ. அலைகள் எழுந்துள்ளன.

ஜப்பானின் பிற பகுதிகளில் அலைகளின் உயரம் சீராக அதிகரித்து 50 மற்றும் 60 செ.மீ ஆக உயர்ந்து வருகிறது, இன்று காலை அது 20 செ.மீ ஆக இருந்தது.

ஜப்பானிய அதிகாரிகள், அலைகள் 3 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு சுனாமி எச்சரிக்கை நீடிக்கக்கூடும் என்றும் குடியிருப்பாளர்களை எச்சரித்தனர்.

ரஷ்யாவின் கெப்செட்கா தீபகற்பத்தின் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து வடக்கு ஜப்பானின் கடற்கரையை சுனாமி அலை தாக்கியுள்ளது.

ஜப்பானின் ஒக்கைடோ பிரதேசத்தின் வடக்கு பகுதிகளில் 30 சென்றிமீட்டர் அளவில் சுனாமி அலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து தீபகற்பத்தின் அண்டியுள்ள தீவுகளில் வாழும் மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி சூழ்நிலையில் இதுவரை எந்த காயமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று ஜப்பானின் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹொக்கைடோ முதல் ஒகினாவா வரையிலான ஜப்பானிய கடற்கரையில் உள்ள 133 நகராட்சிகளைச் சேர்ந்த சுமார் 900,000 பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடம் தெரிவிக்கிறது.

ரஷ்யாவின் கெப்செட்கா தீபகற்பத்தின் கடல் பகுதியில் 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து அமெரிக்காவின் அலஸ்கா, அலுசன் தீவு,அவாய் தீவுகளுக்கும் சுனாமஜ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கெப்செட்கா தீபகற்பத்தை அண்டிய பகுதிகளில் 4 மீட்டர் உயர்வான சுனாமி அலை ஏற்பட்டதில் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் ஜப்பானில் பல பகுதிகளில் சுனாமி அலை ஏற்பட்டதில் புக்கிசிமா- டைனி ஆகிய அணுமின் உலைகளின் வேலையாட்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான சுனாமியில் குறித்த அணுமின் உலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த கடலோர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,  நெமுரோ மற்றும் ஹொக்கைடோவின் மூன்று பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.

அந்நாட்டு நேரப்படி காலை 10:30 மணியளவில் 30 சென்டிமீட்டர் உயர அளவில் சுனாமி ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பகுதியில் உள்ள ஹொக்கைடோவின் கடற்கரையோரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று(30) 8.7 ரிக்டர் அளவில நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரஷ்யா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள்விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 19 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுனாமி எச்சரிக்கையை அடுத்து,குடியிருப்பாளர்கள் கடற்கரையோரங்களில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ரஷ்யாவின்யெலிசோவோ மாவட்டத்தில் 3-4 மீட்டர் உயரத்தில் சுனாமி அலை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை குறைந்தபட்ச சேதம் பதிவாகியுள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் பசிபிக் கடற்கரைக்கும், கலிபோர்னியா, ஹவாய் மற்றும் அமெரிக்காவின் அலஸ்கா பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஜப்பானிய நேரப்படி முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரை 1 மீட்டர் உயர அலைகள் நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே கடற்கரையிலிருந்து மக்கள் விலகி இருக்குமாறு ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button