News
டிஜிட்டல் பொருளாதார மாதமாக செப்டம்பர் மாதம் அறிவிப்பு
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை டிஜிட்டல் ரீதியாக வலுவூட்டப்பட்ட பொருளாதாரமாக மாறுவதை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு இணங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த முயற்சி குறித்துப் பேசிய அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இந்த ஒரு மாத கால பிரசாரம், டிஜிட்டல் மாற்றத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு கட்டமைப்புகளையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளார்.