News
மற்றுமொரு நீதிபதி தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு!
நீதிச்சேவை ஆணைக்குழு (JSC) ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில் மற்றுமொரு மாவட்ட நீதிபதியை இடைநீக்கம் செய்துள்ளது.
அதன்படி, இம்மாதம் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்ட நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தனியே நடத்தப்பட்ட விசாரணையின் பின்புலத்தில், கம்பஹாவில் பணியாற்றிய சிவில் மேல் முறையீட்டு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் செயல்திறன் குறைபாடு குற்றச்சாட்டின் பேரில் கட்டாய ஓய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவருக்கான ஓய்வு ஆவணங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மினுவாங்கொடை மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி இருவரும், தவறான நடத்தை தொடர்பாக நடந்து வரும் விசாரணைகளுக்காக நீதிபதிகள் நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.