News
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : நெல்லின் விலையில் பாரிய வீழ்ச்சி

நாட்டில் நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரிசி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கான விலை 14 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் 2 இலட்சம் கிலோ மெட்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அவை தற்போது சதோச நிறுவனங்களில் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால், உள்ளூர் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் 200 ரூபாவுக்கும் மேல் அரிசியை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, ஐக்கிய அரிசி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.