News

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை ஒக்டோபர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை ஓய்வூதிய திணைக்களம் (Department of Pensions) தெரிவித்துள்ளது.

சைபர் தாக்குதலின் பின்னர் அரச ஊழியர்களின் தரவுக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சுமார் 04 மாதங்களாக சில அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவை முழுமையாக செலுத்த முடியாமல் போயுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டியாராச்சி (Chaminda Hettiarachchi) தெரிவித்தார்.

அத்துடன் இந்த வருடம் ஓய்வு பெற்ற மிகச் சிலர் எவ்வித ஓய்வூதியக் கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஓகஸ்ட் மாதத்திற்கான சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அண்மையில் தெரிவித்திருந்தது.

599,730 பயனாளர்களுக்கான கொடுப்பனவிற்காக அரசாங்கத்தினால் 2,900 மில்லியன் ரூபா வரையான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button