News

பிரித்தானியாவில் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

பிரித்தானியாவில்(United Kingdom) விநியோக துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் Evri, 9000 பணியிடங்களுக்கு ஆட்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அப்பல்லோ குளோபல் முகாமைத்துவ(Apollo Global Management) நிறுவனத்தால் பல பில்லியன் பவுண்டுகளுக்கு Evri நிறுவனம், கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் 9,000 புதிய பணியாளர்களுக்கு வெற்றிடம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்நிலை (online) விநியோக சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதன் பணியாளர்களை அதிகரித்து செயல்பாடுகளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாக அமைந்துள்ளது.

அஞ்சலர்கள்(couriers), கிடங்கு ஊழியர்கள்(warehouse staff) மற்றும் பிற துணைப் பணியாளர்கள் என அனைத்து நிலைகளிலும் இந்த புதிய பணியாளர் தெரிவு பிரித்தானியா முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்காட்லாந்து, சஃபோக்கில்(Suffolk) உள்ள பரி செயிண்ட் எட்மண்ட்ஸ்(Bury St Edmunds), டெவானில்(Devon) உள்ள பிளைமவுத்(Plymouth) மற்றும் கேட்விக் விமான நிலையம்(Gatwick Airport) ஆகியவை முக்கிய பணியிடங்களாக கூறப்படுகின்றது.

இதில், சுமார் 8,000 அஞ்சலர்கள் மற்றும் 1,000 கிடங்கு மற்றும் துணைப் பணியாளர்கள் என மொத்தம் 9,000 பேரை இணைத்துக்கொள்ள குறித்த நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அஞ்சலர்களுக்கு மணிக்கு சராசரியாக £16.50 ஊதியம் வழங்கப்படும் என்றும் Evri நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button