News

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பில் உள்ள பிரதான பல்கலைக்கழகங்கள் உட்பட ஏழு பல்கலைக்கழகங்களின் இரண்டாம் வருட மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு பத்து மாதங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாணவர்கள் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கிறார்கள் என்பதை பல்கலைக்கழகத்தின் மஹாபொல அறக்கட்டளை நிதியம் இதுவரை உறுதிப்படுத்தாதமையே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.

கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துமாறு அறக்கட்டளை நிதியம் பலமுறை பல்கலைக்கழகங்களுக்கு அறிவித்தும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை செலுத்துவதற்கு போதுமான பணம் இருந்தும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்காதது குற்றமாகும், மேலும் ஏராளமான மாணவர்கள் தங்களின் முக்கிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கிறார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் 40,000 மாணவர்களில் 16,000 பேர் மஹாபொல புலமைப்பரிசில்களுக்கு தகுதியுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button