News
எரிபொருள் விற்பனை தொடர்பில் வெளியான தகவல்
கடந்த 13 மாதங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனவரி 2022 விற்பனையுடன் ஒப்பிடுகையில் ஜனவரி 2023 லங்கா ஆட்டோ டீசல் விற்பனை 50%, பெட்ரோல் விற்பனை 30% மற்றும் மண்ணெண்ணெய் விற்பனை 70% குறைந்துள்ளதாக அவர் புள்ளிவிபரங்களுடன் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை எரிபொருள் விற்பனையில் இவ்வாறு பாரிய அளவு குறைவு ஏற்படுவதற்கு கியூ.ஆர் முறைமை மற்றும் பெருமளவில் அதிகரித்த விலை குறிப்பாக மண்ணெண்ணெய் விலை பாரியளவில் அதிகரித்ததால் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கொள்வனவு செய்யும் அளவு குறைந்தமை காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.