விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைதிட்டமானது அம்பாறை (Ampara) மாவட்டத்திலிருந்து ஆரம்பமாகுமென குறிப்பிட்டுள்ளார்.
இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே விஜித ஹேரத் (Vijitha Herath) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“உர மானியம் அதிகரிக்கப்பட்டதை வழங்க பணியாற்றி வருகிறோம். அதன் பின்னர் பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் மகாவலி பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு இதனை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் (Sri Lanka) ஒரு வருடத்திற்கு 100,000 இற்கும் அதிகமானோர் விவசாயத்துறையில் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல (Wasantha Athukorala) அண்மையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.