News

முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

முட்டை விலை குறைப்பு தொடர்பில் அகில இலங்கை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர (Ajith Gunasekara) தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கோழித் தீவனத்தின் விலை குறைக்கப்படுமானால், முட்டைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி மற்றும் சந்தையில் முட்டைக்கான கேள்வி குறைந்தமையினால், முட்டை விலை குறைவடைந்தததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே மேலதிக உற்பத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் அதிகளவான முட்டைகள் பண்ணைகளில் தேங்கியிருந்ததாக அஜித் குணசேகர தெரிவித்தார்.

இதனை விவசாய அமைச்சின் (Ministry of Agriculture) செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன், கோழி முட்டை ஒன்றுக்கான விலையும் குறைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

தற்போது, கோழி முட்டை ஒன்றுக்கான உற்பத்தி செலவு 32 ரூபாயாகக் காணப்படுகின்ற நிலையில்  கடந்த வாரம் பண்ணையாளர்கள் உற்பத்தி செலவினத்திற்குக் கீழ் மட்டத்திலேயே முட்டைகளைச் சந்தைக்கு விநியோகித்திருந்ததாக கூறினார்.

எனவே, கோழித் தீவனத்தின் விலை குறைக்கப்படுமானால், உற்பத்தி செலவினம் குறைவடையும் எனவும் இதன்மூலம் குறைந்த விலையில் முட்டைகளைச் சந்தைக்கு விநியோகிக்க முடியும்“ எஅஜித் குணசேகர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button