மாறும் எரிபொருள் விலை – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் விலை உயரும் பட்சத்தில் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்பு அறிக்கையின் அடிப்படையில் குறித்த குழு பரிந்துரைகளை மேற்கொண்டு வருவதாக இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலையால், எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் கண்காணிப்பு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதில் தலையிட்டு எண்ணெய் விலையை எப்படி கட்டுப்படுத்த முடியும், அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் செயல்பட இந்த குழு முடிவு செய்துள்ளது.
இதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த எரிபொருள் கட்டண திருத்தத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் பஸ்களின் கட்டணங்கள் தொடர்பிலும் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
“எரிபொருள் விலையை அரசு குறைத்துள்ளது, ஆனால் பேருந்து கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது, எனினும் பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படவில்லை, எனவே, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளித்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் மற்றும் பஸ்களின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்ய, அதற்காக அறிக்கை ஒன்றை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.