Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரை வென்ற இலங்கை

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரை வென்ற இலங்கை | Sri Lanka Won Odi Series With West Indiesசுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று (23) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி பல்லேகலையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வரையறுக்கப்பட்ட 44 ஓவர்களில் 36 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.

செர்பேன் ரதபோர்ட் 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து துடுப்பாடிய இலங்கை அணி, 38.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.

இதில் சரித் அசலங்க 62 ஓட்டங்களை பெற்றார். இதன்படி இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2:0 என்ற நிலையில் வெற்றி பெற்றுள்ளது

இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 26ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button