News
தேர்தலின் பின் வடக்கு மக்கள் மத்தியில் புதிய திட்டங்கள்: ஜனாதிபதி பகிரங்கம்
சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமான சட்டத்துடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று (23) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிரிவினை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை நிலைநாட்டக்கூடிய அரசாங்கத்தை அமைக்கும் சிறப்புப் பொறுப்பு திருகோணமலை மாவட்ட மக்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமான சட்டத்துடன் “நான் இலங்கையன்” என்று அனைவரும் பெருமையுடன் கூறக்கூடிய நாடு கட்டியெழுப்பப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தேசிய மக்கள் சக்தி மீது, வடக்கில் உள்ள மக்கள் பெருமளவில் விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.