தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் : இலங்கை அணிஅறிவிப்பு
தென்னாபிரிக்காவுக்கு(south africa) எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு(sri lanka cricket) அறிவித்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ளது.
முதலாவது டெஸ்ட் தொடர் நவம்பர் 27 ஆம் திகதி கிங்ஸ்மீட், டேர்பனில் தொடங்கவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 5 ஆம் திகதி செயின்ட் ஜோர்ஜ் பார்க், இல் நடைபெறவுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காக பத்து இலங்கை வீரர்கள் கடந்த வாரம், தென்னாபிரிக்காவிற்கு புறப்பட்டனர்.
இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரத்ன, ஏஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமால், பிரபாத் ஜெயசூரிய உள்ளிட்ட 10 வீரர்கள் தென்னாபிரிக்காவில் உள்ள டேர்பனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். மீதமுள்ள வீரர்கள் நவம்பர் 22, 2024 அன்று தென்னாபிரிக்காவுக்கு புறப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி வருமாறு,
தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்) பத்தும் நிஸ்ஸங்க,திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மத்யூஸ், குசல் மெண்டிஸ்,கமிந்து மெண்டிஸ், ஓஷத பெர்னாண்டோ,சதீர சமரவிக்ரம, பிரபாத் ஜெயசூரிய,நிஷான் பீரிஸ், லசித் எம்புல்தெனிய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ,லஹிரு குமார,கசுன் ராஜித