News

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (Ministry of Finance, Planning and Economic Development) தீர்மானித்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் நாளை மறுதினம் (25) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அஸ்வெசும நலன்புரி திட்டப் பயனாளர்களுக்கான குறைபாடுகளைச் சமர்ப்பிப்பதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை மறுதினம் (25) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை இது தொடர்பான குறைபாடுகளைத் தெரிவிக்க முடியும்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அஸ்வெசும பயானாளிகளின் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் 3000 ரூபா கொடுப்பனவானது அவர்களுடைய குடும்பத்தினரின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button