News

வவுனியா பல்கலைக்கழகத்தினால்., முயற்சியாண்மையும் சிறு வியாபார முகாமைத்துவமும் சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!

வவுனியாப் பல்கலைக் கழகத்தினுடைய தொழில் வழிகாட்டுதல் அலகிலிருந்து முயற்சியாண்மையும் சிறு வியாபார முகாமைத்துவமும் சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகைமைகள்:

கற்கை நெறியினை தொடர்வதற்கு பின்வரும் தகைமைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

1. ஆகக் குறைந்தது தரம் 9 ஆல்லது பாடசாலைக் கல்வி

அல்லது

2. ஆரம்பக் கல்வியை பூர்த்தி செய்திருத்தலுடன் குறைந்த பட்சம் 2 வருட வேலை அனுபவத்தை கொண்டிருத்ததல்.

3. குறைந்தபட்சம் 16 வயதினை கட்டாயம் பூர்த்தி செய்திருத்தல்.

2. பயனாளிகள்:
பாடசாலையை விட்டு வெளியேறியோர் (க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர் தரம்), பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்கள், தொழில் முனைவோர்கள் வியாபாரத்தை ஆரம்பிக்க எதிர் பார்ப்பவர்கள், பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் துறை சார் அறிவை மேம்படுத்த விரும்புவோர்.

3. மாணவர் எண்ணிக்கை மற்றும் கட்டணம்:

அதிக பட்சமாக ஒரு தரத்தில் 30 மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இக்கற்கை நெறிக் காலம் 06 மாதங்கள் ஆகும். இக்கற்கை நெறிக்கட்டணமாக மாணவர்களிடமிருந்து ரூபா 10,000.00 அறவிடப்படும். என்பதுடன் ஒரே தடவையில் செலுத்தி முடிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். கற்கை நெறியின் முடிவில் பரீட்சைக்கட்டணமாக ரூபா 3500.00 செலுத்தப்படல் வேண்டும்.

4. கற்கை நெறி, மொழி, காலம் மற்றும் இடம்

கற்கை நெறி தமிழ் மூலம் நடைபெறும். கற்கை நெறிக்காலம் 6 மாதங்கள் ஆகும். விரிவுரைகள் வார இறுதி நாட் களிலும் விடுமுறை நாடுகளிலும் நடைபெறும். விரிவுரைகள் அனைத்தும் பூங்கா வீதி, வவுனியாநகர் எனும் முகவரியில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம் பெறும்.

5. விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் பணமாக ரூபா 500.00 இனை வவுனியாப் பல்கலைக்கழகம், கணக்கிலக்கம் 040-1-003-8-1640087, மக்கள் வங்ககிக் கிளை, வவுனியா. எனும் கணக்கிலக்கத்தில் வைப்பிலிட்டு அதற்கான பற்றுச்சீட்டினையும் சுய முகவரியுடன் ரூபா 50.00 முத்திரையிடுப்படும் “9×4” அளவுள்ள கடித உறையையும் .பூரணப்படுத்தப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் தகைமையை உறுதி செய்யும் ஆவண பிரதிகளையும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பிரதிப் பதிவாளர், பரீட்சைகள் கிளை, வவுனியாப் பல்கலைக்கழகம், பம்பைமடு, வவுனியா. என்ற முகவரிக்கு நேரடியாகவோ தபாலிலோ சமர்ப்பிக்கவும். கற்கை நெறிக்கான விண்ணப்ப படிவம் மற்றும் ஏனைய தகவல்களை வவுனியா பல்கலைக்கழக இணையத்தில் (www.vau.ac.lk) பெற்றுக் கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு:

இணைப்பாளர்,
முயற்சியாண்மையும் சிறு வியாபார முகாமைத்துவமும் சான்றிதழ் கற்கை நெறி வவுனியாப்
பல்கலைக்கழகம்,
தொ.பே. 0774683308,
மின்னஞ்சல் cgcunselor@vau.ac.lk

பதிவாளர்
வவுனியாப் பல்கலைக்கழகம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button