பதவியை துறக்க தயார் – நாமல் ராஜபக்ச பகிரங்க சவால்
தனது கல்வி தகைமை தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தான் நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகுவதாக மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
அத்துடன், சட்டப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ( Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் நேற்றைய தினம் (17) நாடாளுமன்ற வாதத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று பதிலளிக்கையிலேயே நாமல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை எனவும் இது இலங்கை சட்டக் கல்லூரியின் நம்பகத்தன்மையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.