News

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள கோரிக்கை | Do Not Stay In South Korea Illegally

நிர்ணயிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்தால், சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம் என்று  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களின் தகவல்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிலுக்காக செல்பவர்களின் செயற்பாடுகளின் காரணமாக இந்நாட்டிற்கு கிடைக்கும் வேலை ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும் என்பதால், சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button