News

விவசாயிகளுக்கான உரமானியம் குறித்து வெளியான தகவல்

விவசாயிகளுக்கு உர மானியத்திற்கான நிதி வழங்கல் தற்போது 95% நிறைவடைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் திணைக்களம் (Department of Agrarian Development) தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை ரூ.16,369 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் யு. பி. ரோஹண ராஜபக்ச (Rohana Rajapaksha) தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நிலவரப்படி, உர மானியங்களுக்காக விவசாயிகளுக்கு 9,889 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் இன்றைய (15) தினத்திற்குள் 1,666 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன் அனுராதபுரம் (Anuradhapura), அம்பாறை (Ampara) மற்றும் குருநாகல் (Kurunegala) மாவட்டங்கள் அதிக மானியப் பணத்தைப் பெற்றுள்ளதாக  ரோஹண ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button