News

மெட்டா நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்

மெட்டா (Meta) நிறுவனம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI வந்தபிறகு உலக முன்னனி நிறுவனங்கள் அதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றன.

இதனால், ஊழியர்களின் பணிக்கு அபாயம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தும் மெட்டா நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனடிப்படையில், குறித்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை பணியமர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறுவனத்தின் கொள்கைகளை சீரமைக்கும் ஒருபணி நடைபெற்று வருகின்றது.

குறைந்த செயல்திறன் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 3,600 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

அதாவது, ஐந்து சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு போதிய இழப்பீடும் வழங்கப்படும்.

ஒரு வருடத்தில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதவர்களை நாங்கள் பொதுவாக நிர்வகிக்கிறோம்.

செப்டம்பர் மாத நிலவரப்படி மெட்டாவில் மொத்தம் சுமார் 72,400 பணியாளர்கள் உள்ளனர், இதில் 3,600 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button