அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புகளுக்கான கோரிக்கைகளை விடுப்பதற்கு முன்னர் ஒவ்வொரு அரசு நிறுவனத்திலும் உள்ள பணியாளர்கள் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்களுக்கும் பிரதமரின் செயலாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் பணியாளர் மேலாண்மையை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கு இது தொடர்பான மதிப்பாய்வுகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரையில் ஊழியர்களால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்பத்தை மையப்படுத்திய இலத்திரனியல் அரச சேவை அணுகுமுறை மற்றும் புதிய மனித வள மேலாண்மை முறை மூலம் சரியான மனிதவள மதிப்பீடு மேற்கொள்ளுமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட நிதி இடத்திற்குள் ஊழியர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தாமல், அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளைச் செய்வதற்கான அதிகாரம் குறித்த குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியினால்அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.