News

போராட்டத்தில் குதிக்கும் அரச துறை அதிகாரிகள்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசனத் துறை உதவி பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா (Niroshan Silva) தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வு முறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் நாளை (17.02.2025) சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரால் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச சேவையில் ஆட்சேர்ப்புகள் பாதீட்டுக்கு பின்னர் ஆரம்பிக்கும் என்றும் ஆனால் அவை அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாடுகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button