News

யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் – அமைச்சரின் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

புதிய பணிமனையை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக கொழும்பு (Colombo) கோட்டை – பத்திர முல்லை வரை இ. போ. ச. இரவு நேர பேருந்து சேவையும் நடத்தப்படுகிறது.

இதன்போது, கடவுச்சீட்டுக்கான அவசர தேவை கொண்டவர்கள் மாத்திரம் பணிமனைக்கு வருகை தந்து பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், தற்போது போதுமான கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளமையால் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button