News
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எப்போது வெளியான தகவல்.

எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில்(colombo) மே தினத்தை (may day)மிகுந்த ஆடம்பரமாக நடத்திய, பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்ற ஆலோசனைகள் கிடைத்துள்ளதாக அரசாங்கத்துடன் தொடர்புடைய சில கட்சிகள் தெரிவிக்கின்றன.
அப்படி நடந்தால், மே முதல் வாரத்தில் தொடர்புடைய தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கட்சிகள் கூறுகின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குத் தகுதி பெற்ற வாக்காளர்கள் இந்த ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்கும் தகுதி பெற்றுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 13,619,916 பேர் வாக்களித்திருந்தனர்.