News
அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம்

இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குழு நேற்றைய தினம்(22) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தமது தலைமையின் கீழ் இந்தப் பெயர்களை அறிவித்துள்ளார்.
இதில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa), சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹர்சன நாணயக்கார, பத்மநாதன் சத்தியலிங்கம்(P. Sathiyalingam )மற்றும் நிஹால் அபேசிங்க ஆகியோர் அடங்குகின்றனர்.