News

அவசரகால மருந்து கொள்முதல்களில் மோசடி : வெளியான தகவல்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அவசரகால கொள்முதல் முறையின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான போலி ஆவணங்கள் குறித்து பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவிற்கு (COPE) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) தலைமை நிர்வாக அதிகாரி சவீன் செமகே குழுவிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற 06 போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறிய சவீன் செமகே, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒவ்வொரு ஆவணங்கள் தொடர்பாகவும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த சம்பவங்கள் குறித்து இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மருந்துகளுக்கான அதிக எண்ணிக்கையிலான தள்ளுபடி பதிவுகள் பெறப்பட்டதாக கோப் உறுப்பினர் அசித நிரோஷன எகோட விதானவும் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் 656 தள்ளுபடி பதிவுகளும் (WOR) 2023 இல் 261 பதிவுகளும் பெறப்பட்டதாக அவர் கூறியுள்ளார.

மேலும், அத்தியாவசிய மருந்துகளை நேரடியாக இறக்குமதி செய்ய அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தை (SPC) அனுமதிப்பது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் துணை இயக்குநர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button