கனடாவில் பட்டம் பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு

கனடாவில் (Canada) பட்டம் பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான வேலை அனுமதி விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post-Graduation Work Permit (PGWP) குறித்த புதிய மாற்றத்தின்படி, கனடாவில் இப்போது பட்டம் பெற்ற அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் வேலை அனுமதி பெற வாய்ப்பு கிடைக்கின்றது.
இதன்மூலம் தற்போது கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் பணியாற்றும் திறனைக் கூர்மைப்படுத்தி, கனடாவில் தங்கும் வாய்ப்பைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கு முன்பு, PGWP பெற கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மட்டுமே பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடு இருந்தது.
இனி, எந்தவொரு பட்டம் பெற்றவரும் (bachelor’s, master’s, doctoral) PGWP இற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், கனடாவில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கு மிகப்பெரிய பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திறமையான வெளிநாட்டு பட்டதாரிகளை தக்கவைத்துக்கொள்ளும் கனடாவின் முயற்சியில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.