News

பிரித்தானியாவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு மகி்ழ்ச்சி தகவல்

பிரித்தானியாவில்(UK) உள்ள ட்ர்ஹாம்(Durham) பல்கலைக்கழகம் 2025ஆம் ஆண்டிற்கான “Inspiring Excellence 5K” முதுநிலை உதவித்தொகையை அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் மூலம், 200 சர்வதேச மாணவர்கள் தங்களின் முழுநேர (ஒன்றாண்டு) முதுநிலைப் படிப்புகளுக்காக £5,000 கல்விக்கட்டண தள்ளுபடியைப் பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உதவி தொகையை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விதிமுறைகள் சில குறிப்பிடப்பட்டுள்ளன.

>இந்த உதவித்தொகையை பெற, விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

>2025 செப்டம்பரில் தொடங்கும் MSc, MA, LLM அல்லது MDS போன்ற முழுநேர (ஒன்றாண்டு) முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

>MBA மற்றும் Business School குறித்த சில படிப்புகள் இந்த உதவித்தொகைக்குத் தகுதியற்றவை.

>2025 மே 4 (முதல் சுற்று) அல்லது ஜூன் 8 ஆம் திகதிக்குள் (இரண்டாம் சுற்று) Durham பல்கலைக்கழகத்திலிருந்து முன்பதிவுச் செய்திருக்க வேண்டும்.

>வெளிநாட்டு (overseas) மாணவர் என வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

>பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

>ஏற்கனவே Durham பல்கலைக்கழகம் வழங்கும் எந்தவொரு உதவித்தொகையும் பெறக்கூடாது (சில நாடுகளுக்கான Durham International Scholarship மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்).

மேலும், அந்த பல்கலைக்கழகம் தொடர்பில் தெரிந்துக் கொள்ள – Durham university

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button