தங்க ஆபரண துறையில் புதிய பிரச்சினை – வெளியான தகவல்..!
இரத்தின மற்றும் தங்க ஆபரண துறையில் பல பிரச்சினைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை கண்டறிவதற்கான தேசிய சபையின் இரண்டாவது அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
உலோகம் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் உலகளாவிய தலைமையகமாக ஹொங்காங் மற்றும் பேங்கொக் மாறிவிட்டதாகவும், இலங்கையின் மூலப்பொருட்களில் எந்த மதிப்பு கூட்டுதலும் இல்லாமல் சந்தையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இலங்கை தரமான தங்கத்தை இறக்குமதி செய்கிறது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளின் போது விதிக்கப்படும் வரிகள் மற்றும் வர்த்தக இலாபங்களுக்கு விதிக்கப்படும் வரி ஏற்றுமதியை பலவீனப்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக, தொழில்துறை மற்றும் புவியியல் ஆய்வு அமைச்சு மற்றும் சுரங்கப் பணியகம் ஆகியன முறையான அறிவியல் முறையைப் பயன்படுத்தி, அனைத்து கனிமங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கனிமங்களின் புதிய வரைபடத்தை உருவாக்கி அவற்றை பொதுவாக அறிவிக்க வேண்டும் என சபையின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.